RSS
Image

ஏதோ ஓன்று என்னை தாக்க ..

ஏதோ ஓன்று என்னை தாக்க ..

●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●

நெருக்கடியின்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகப் பெரிய பலம்.

●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●

பிரார்த்தனைகளைவிட மிகவும் உயர்ந்தது. பொறுமைதான்.

●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●

கோபம் அன்பை அழிக்கின்றது. செருக்கு அடக்கத்தை அழிக்கின்றது.

●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●

கோபம் வரும் போது, அதன் விளைவுகளை எண்ணிப்பார்.

●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●

ஈகோ சுடுகிறது..ஆழ்ந்த காதலிலும்..சிலச் சில

ஊடல்களின் அழுத்தங்களில் …

●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●

சொல்லிய வார்த்தைக்கு நீ அடிமை; சொல்லாத வார்த்தை உனக்கு அடிமை.

●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●

 
Leave a comment

Posted by on January 4, 2014 in கவிதைகள்

 
Image

வாழ்வும் சாவும்

வாழ்வும் சாவும்

ஏதோ ஒன்றுக்கு
அடிமையாயிருக்கிறது,
எல்லா மனமும் …

பலமோ பலவீனமோ
அதில்தான்

வாழ்வும் சாவும் …

 
Leave a comment

Posted by on January 4, 2014 in கவிதைகள்

 
Image

எனக்காக ….

எனக்காக ....

பலர் கேட்ட பாடல்
வேண்டாம்
அன்பே ….
எனக்காக பாடு .
இரவு முழுக்க
இதயமிழக்க ..

 
Leave a comment

Posted by on January 4, 2014 in கவிதைகள்

 
Image

உன் நினைவுகள் மட்டுமே..!

உன் நினைவுகள் மட்டுமே..!

இந்த உலகம்
எனை தனிமைபடுத்தும் போதெல்லாம்
துணையாய் நிற்பது
உன் நினைவுகள் மட்டுமே

இந்த அகிலம்
எனை அழ வைக்கும் போதெல்லாம்
எனை அழைத்து அழ விடாமல்
பார்த்து கொள்ளவது
உன் நினைவன்புகள் மட்டுமே

எனை சுற்றி இருப்பவர்கள்
எனை சுற்றி விட்டு வேடிக்கை
பார்க்கும் போதெல்லாம்
எனக்கு நேர்வழியை காண்பித்தவள்
நீ
என்று நினைக்கையில்
இன்றும் அதே வழியில்தான் போய்க் கொண்டிருக்கிறேன்
அன்று உன்னோடு
இன்று உன்னினைவுகளோடு

என்றோ
நாம் பேசி பழகியதை நினைத்துப்பார்க்கையில்
இன்றும் அதே சுவையோடுதான் இருக்கிறது
அந்த நினைவுகள்

உன் நினைவுகள்
இந்த நிஜ உலகத்தை நிழலுலகம் ஆக்கி
உன் நினைவுலகத்தை
எனக்கு மட்டும் நிஜ உலகமாய்
மாற்றிவிட்டது

என்றும்
உன் நினைவு நிஜ உலகத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கும்…

நான் 🙂

 
Leave a comment

Posted by on October 7, 2013 in கவிதைகள்

 

( ஏ )மாற்றம்

1082730_561493067226171_1305941292_n

 

எழுதிய கவிதை ஒன்று
எரிக்க பட்டதால்
என்
கவிதைகள் கானலாய் கலைந்திருக்க…

என் வார்த்தைகள்
மனம் எனும் மலை எறி மௌணத்தற்கொலைகள் செய்திருக்க

கண்ணீர் கடலினிள் கண்களும் கரைந்து இருக்க

என் இதயமும் துடிக்கிறது இசை நிறுத்த…!

 
1 Comment

Posted by on September 20, 2013 in கவிதைகள்

 

நினைவாகும்… என் கனவு..

Image

மரணம் கூட பயப்படும்
உன் மௌனம் கலையும் போது..

விடுதலை கொடு எனக்கு
உன் இதயச்சிறையிலிருந்து

அரசி போலிருந்தால்
இரக்கம் இறந்துவிடுமா!
இல்லை மறந்துவிடுமா!

உயிரோடு உறங்க முடியவில்லை
உறக்கமும் கனவானது பல நாள்..

நிரந்தர உறக்கம் ஒரு நாள்
அன்று நினைவாகும்…
என் கனவு..

 
Leave a comment

Posted by on May 16, 2013 in கவிதைகள்

 
Image

போ..! நீ போ..!

போ..!  நீ போ..!

பேசிக் கொண்டு இரு என்கிறேன் – நீ
பேசாமல் கொல்கிறாய்.

பாசத்தை தா என்கிறேன் – நீ
பாசாங்கு காட்டுகிறாய்.

விரல் தொடு என்கிறேன் – நீ
விஷத்தைக் கக்குகிறாய்.

வேஷத்தை கலை என்கிறேன் – நீ
வேண்டுமென்றே நடிக்கிறாய்…

முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றால்
முப்பது அடி தள்ளி நிற்கின்றாய்..

 
1 Comment

Posted by on April 17, 2013 in கவிதைகள்

 
Image

விண்ணும் கண்ணீ ர் சிந்துகிறது..!

விண்ணும் கண்ணிர் சிந்துகிறது..!

அனாதையாய் நிற்கும் இந்த
ஐந்தறிவு ஜீவனை பார்த்து
அந்த விண்ணும் கண்ணீ ர் சிந்துகிறது
மழைத்துளியாய் …

______________________________________________

நான் பிறந்த பொழுது அழகாகத் தான் இருந்தேன்,
மாநகராட்சியும், இந்த மானிடர்களும்
எனை அழுக்காக்கி விட்டனரே…
ஏ வானமே உனக்கு மட்டும் ஏன் கரிசனம்
இப்பொழுது வந்து குளியாட்டுகிறாய் ..

 
6 Comments

Posted by on September 15, 2012 in கவிதைகள்

 
Image

கவிதை என்னும் மூன்றெழுத்து கிட்டியது ..!

கவிதை என்னும் மூன்றெழுத்து கிட்டியது ..!

எனக்கு உயிர் தந்த அன்னையே …!
அன்னை அன்பாய் ஊட்டிய தமிழே..!
தமிழால் நான் கற்ற கனிவே ..!
கனிவினால் உருவான பணிவே…!
பணிவால் கிடைத்த வெற்றியே ..!
வெற்றி எனக்களித்த துணிவே ..!
உங்களின் இந்த மூன்றெழுத்துக்களால் தான்
எனக்கு கவிதை என்னும்
மூன்றெழுத்து கிட்டியது ..!

 
2 Comments

Posted by on September 14, 2012 in கவிதைகள்

 
Image

தீக்குச்சியும் , மெழுகுவத்தியும் ..!

தீக்குச்சியும் , மெழுகுவத்தியும் ..!

மெழுகுவத்திக்கு உயிரூட்டிய தீக்குச்சி
சில நொடியில் அணைந்திருக்கலாம்..!
நான் இரவில் படித்திட ஒளியூட்டிய
மெழுகு சில நிமிடங்களில் உருகியிருக்கலாம் ..
ஆனால் உங்களின் ஒளிச்சுடரால் என்னுள்
ஏற்றப்பட்ட அறிவுச்சுடர் என்றும்
அணையா தீபமாய் …!

 
2 Comments

Posted by on September 12, 2012 in கவிதைகள்