RSS

Monthly Archives: September 2012

Image

விண்ணும் கண்ணீ ர் சிந்துகிறது..!

விண்ணும் கண்ணிர் சிந்துகிறது..!

அனாதையாய் நிற்கும் இந்த
ஐந்தறிவு ஜீவனை பார்த்து
அந்த விண்ணும் கண்ணீ ர் சிந்துகிறது
மழைத்துளியாய் …

______________________________________________

நான் பிறந்த பொழுது அழகாகத் தான் இருந்தேன்,
மாநகராட்சியும், இந்த மானிடர்களும்
எனை அழுக்காக்கி விட்டனரே…
ஏ வானமே உனக்கு மட்டும் ஏன் கரிசனம்
இப்பொழுது வந்து குளியாட்டுகிறாய் ..

 
6 Comments

Posted by on September 15, 2012 in கவிதைகள்

 
Image

கவிதை என்னும் மூன்றெழுத்து கிட்டியது ..!

கவிதை என்னும் மூன்றெழுத்து கிட்டியது ..!

எனக்கு உயிர் தந்த அன்னையே …!
அன்னை அன்பாய் ஊட்டிய தமிழே..!
தமிழால் நான் கற்ற கனிவே ..!
கனிவினால் உருவான பணிவே…!
பணிவால் கிடைத்த வெற்றியே ..!
வெற்றி எனக்களித்த துணிவே ..!
உங்களின் இந்த மூன்றெழுத்துக்களால் தான்
எனக்கு கவிதை என்னும்
மூன்றெழுத்து கிட்டியது ..!

 
2 Comments

Posted by on September 14, 2012 in கவிதைகள்

 
Image

தீக்குச்சியும் , மெழுகுவத்தியும் ..!

தீக்குச்சியும் , மெழுகுவத்தியும் ..!

மெழுகுவத்திக்கு உயிரூட்டிய தீக்குச்சி
சில நொடியில் அணைந்திருக்கலாம்..!
நான் இரவில் படித்திட ஒளியூட்டிய
மெழுகு சில நிமிடங்களில் உருகியிருக்கலாம் ..
ஆனால் உங்களின் ஒளிச்சுடரால் என்னுள்
ஏற்றப்பட்ட அறிவுச்சுடர் என்றும்
அணையா தீபமாய் …!

 
2 Comments

Posted by on September 12, 2012 in கவிதைகள்

 
Image

நட்பின் காதலும் …! காதலின் நட்பும் ..!

நட்பின் காதலும் ...! காதலின் நட்பும் ..!

நட்பு என்னும் புரிந்துணர்வு
இல்லா காதல் நிலையல்ல ..
காதல் என்னும் பகிர்ந்துணர்வு ..
இல்லா நட்பும் நிலையல்ல ..எனவே
நட்பின் காதலும் …
காதலின் நட்புமே ..
சிறந்தது …

 
2 Comments

Posted by on September 12, 2012 in கவிதைகள்

 
Image

விடியல் ..!

விடியல் ..!

இரவின் இருளை கண்டு அஞ்சி..
விடியலின் வருகையை எதிர்நோக்குவதை
விட்டு விட்டு ..
இரவின் எழிலை ரசித்து பார் …
விடியல் உனக்காக
வரவேற்புக் கம்பளம் விரித்து
காத்திருக்கும்…

————————————————-

காலை கதிரவன் எழுந்தாலும்
நான் விழிப்பதில்லை…உன்
கால் கொலுசு சத்தம் தான்
எனது விடியல் ..

 
2 Comments

Posted by on September 7, 2012 in கவிதைகள்