RSS
Image

நட்பின் காதலும் …! காதலின் நட்பும் ..!

நட்பின் காதலும் ...! காதலின் நட்பும் ..!

நட்பு என்னும் புரிந்துணர்வு
இல்லா காதல் நிலையல்ல ..
காதல் என்னும் பகிர்ந்துணர்வு ..
இல்லா நட்பும் நிலையல்ல ..எனவே
நட்பின் காதலும் …
காதலின் நட்புமே ..
சிறந்தது …

 
2 Comments

Posted by on September 12, 2012 in கவிதைகள்

 
Image

விடியல் ..!

விடியல் ..!

இரவின் இருளை கண்டு அஞ்சி..
விடியலின் வருகையை எதிர்நோக்குவதை
விட்டு விட்டு ..
இரவின் எழிலை ரசித்து பார் …
விடியல் உனக்காக
வரவேற்புக் கம்பளம் விரித்து
காத்திருக்கும்…

————————————————-

காலை கதிரவன் எழுந்தாலும்
நான் விழிப்பதில்லை…உன்
கால் கொலுசு சத்தம் தான்
எனது விடியல் ..

 
2 Comments

Posted by on September 7, 2012 in கவிதைகள்

 
Image

தேடல்..!

தேடல்..!

வழியில் தோன்றும் வலியும் இனிமை சேர்க்கின்றது
என்னவளே உனை தேடிவருகையில் …

————————————————————–

ஓன்று கிடைக்கும் வரை தேடுகின்றோம்,
கிடைத்த பின் அடுத்ததைத் தேடுகின்றோம்.

தேடல் மட்டும் திகட்டி விட்டால்
உன் வாழ்க்கை  வாடிய பூச்செண்டு தான்…

தேடல் தொடரட்டும் ….

————————————————————

 
2 Comments

Posted by on August 31, 2012 in கவிதைகள்

 

கற்பனை

கற்பனை  என்னும் ஒரு  விதையில் தான் …
க‍விதை என்னும் பல மரங்கள் வளர்கிறது …
அம்மரங்கள் பூப்பதும், காய்ப்பதும் ,கனிவதும்
உன் கற்பனையிலே ..

__________________________________

கற்பனைக்கே எட்டாத கவிதை நீ ..!
உனக்கு கவிதை எழுத வார்த்தைகள் யோசித்தே..
வற்றிப்போகிறது….என் தாய்மொழி…

__________________________________

தாய்மொழியாம் தமிழ் பயின்று
ஒருவரிகவிதை கூட எழுத உதவாத
உங்கள் கற்பனைகள் எதற்கு .?
விட்டுவிடுங்கள் அதை விற்பனைக்கு ..
__________________________________
விற்பனைக்கு வாங்க முடியாத
ஒரே சொத்து உந்தன் கற்பனை ..!
__________________________________

 
Leave a comment

Posted by on August 24, 2012 in கவிதைகள்

 
Image

ஒரு தலைக்காதல்…!

ஒரு தலைக்காதல்...!

ஒரு தலை காதலா..? , இல்லை..இல்லை
ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்காக காதல் சொல்வர்..
ஒவ்வொரு நொடியும் நான் உன் நினைவுகளுடனே..
ஒன்றி வாழ்ந்து கொண்டு இருப்பதினால் தான்
ஒரு நாளும் சொல்லவில்லை ..என் காதலை.

————————————————————————

என் காதல் ஒரு தலை தான் .
ஈருடல் ஓருயிர் தானே
காதலின் அடிப்படை கோட்பாடு ..!
நம் ஒரு உயிரில் உண்டாகும் காதல்
என்றும் ஒருதலை தான்..

————————————————————————

ஒரு தலை தான் காதல்..
உன் சம்மதம் கிடைக்காவிடில்
பத்து தலைகள் கொண்ட இராவணனுக்கும்.
காதல் ஒரு தலை தான்…

 
2 Comments

Posted by on August 20, 2012 in கவிதைகள்

 
Image

மன்னிக்கவா? மறக்கவா.?

மன்னிக்கவா? மறக்கவா.?

——————————————————

மழை வருவதற்காக..
மரக்குச்சிகளை வெட்டி யாகம் வளர்க்கும்…. இந்த
மனித இனத்தை மன்னிக்கவா? மறக்கவா.?

உழவனின் நண்பனாம் மண்புழுவை
தூண்டிலில் மாட்டி மீனைத்தேடும்…இந்த
மானிடப்பதர்களை மன்னிக்கவா? மறக்கவா.?

அரசியல் என்ற பெயரில் .
வாக்குறுதிகளை அள்ளி விட்டு..
வம்சாவழிகளுக்கு வளம் சேர்க்கும்..இந்த
கூறுகெட்ட கூட்டு சக்திகளை மன்னிக்கவா? மறக்கவா.?

மறக்க இயலாமல்தான் மருங்கி ,கிடக்கிறேன்…
என் தோல்வியின் வீரியத்தை பதிவு செய்ய,
வலிகளை முழுமையாய் வெளிப்படுத்துகிற வல்லமையை..
தமிழே..! உன்னை அன்றி வேறு யாரால் தர இயலும்..!

——————————————————

 
2 Comments

Posted by on August 17, 2012 in கவிதைகள்

 
Image

மின்னல்…!

மின்னல்...!

கூந்தலை பின்னலிட்டு ..
நீ வீட்டின் ஜன்னலோரம்..
நிற்கும் நாணலை ..பார்த்து
அந்த விண்ணும் படம் பிடித்தது
மின்னலாய்…!

——————————————————

மின்னலாய் உன் நினைவுகள் தாக்க
என் மனதில் இருள் புடை சூழ்ந்து
விழிகளின் வழியே வந்தது கண்ணீர் மழை..

——————————————————

 
Leave a comment

Posted by on August 10, 2012 in கவிதைகள்

 
Image

வரமா ? தவமா ?

வரமா ?  தவமா ?

கரம் கோர்த்து
நடந்திட
வரம் கிடைத்தது…
தாய்க்குப்பின்
‘தமிழ்’

——————————————————

தமிழே…! உன்னிடம்
வார்த்தை வரம் வாங்கி வந்தேன்..
உன் வார்த்தைகளை நான் காதலிக்க..
அந்த காதல் என்னை கவிஞனாக்குகிறது..

——————————————————

கவிஞன் என்று எண்ணி
நான் காணும்
கனவுகள் யாவும்..
நினைவாகவும்
நினைவுகள் யாவும்
நிஜமாகவும் ஆசை..
இதுவே நான் புரியும்
காதல் தவத்திற்கு வரம்..

——————————————————

வரம் வேண்டி தவம் இருப்பர்..
ஆனால் உன் வருகைக்காக..
தவம் இருக்கிறது..
என் விழிகள்…!

——————————————————

விழி அசைவிற்காக
தவம் இருந்த எனக்கு..
உன்னிடம் இருந்து கிடைத்த
ஒரே பதில்…
உன் மௌனம்…

——————————————————

மௌனம் இதழ்களின் தவம்..
தூக்கம் விழியின் தவம்..! எனில்
எனது வாழ்நாள் தவம்..
உந்தன் கரம் கோர்பது..

——————————————————

 
Leave a comment

Posted by on August 3, 2012 in கவிதைகள்

 
Image

ஒரு பட கவிதை – தீக்குச்சியின் மரணம்..!

ஒரு பட கவிதை - தீக்குச்சியின் மரணம்..!

தன் கடமையை முடிக்க
தன்னையே மாய்த்துக் கொண்ட
தன்னலமற்ற வீரனை,
தன் மண்ணில் புதைத்து
தலைவணங்கி நிற்கிறது..
தற்க்கொலைப்படை!

————————————————
எரித்த தணலை
எதிர் நோக்கியே
எரியத்துடிக்கும்
எரியூட்டிகள்!

எரித்தலும், எரிதலும்
என்புக்கு மட்டுமே!
எனக்கில்லை என்கிறதே
என் ஆன்மா!
————————————————
மடிந்தவனுக்கு
மரணத்தை எதிர்நோக்கும்
மகான்களின் மௌன அஞ்சலி..!
————————————————
இறப்பு என்பது இயல்பானதாம்
இயல்பாய் இருக்க
இயலவில்லை – உன்
இறப்பு , இயல்பாய் வராததால்…!

 
Leave a comment

Posted by on August 2, 2012 in கவிதைகள்